திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 9 அக்டோபர் 2023 (11:44 IST)

ஷருக் கானுக்கு தொடர் கொலைமிரட்டல்… Y+ பாதுகாப்பு வழங்க மகாராஷ்டிரா அரசு முடிவு!

பாலிவுட்  சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான் நடிப்பில் தமிழ் இயக்குனர் அட்லி இயக்கிய ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது. இந்த படத்தில் தமிழ் பிரபலங்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

படம் சுமார் 1100 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்தது. இதன் மூலம் பாலிவுட் படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை ஜவான் படைத்துள்ளது.

இந்நிலையில் பதான் மற்றும் ஜவான் படங்களின் ரிலீஸுக்கு பிறகு ஷாருக் கானுக்கு தொடர்ச்சியாக் கொலை மிரட்டல்கள் வருவதாக மகாராஷ்டிரா காவல்துறையில் புகாரளித்துள்ளார் ஷாருக் கான். இதையடுத்து அவருக்கு Y+ பாதுகாப்பு வழங்க மகாராஷ்டிரா மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.