திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 9 அக்டோபர் 2023 (07:36 IST)

இன்று வெளியாகிறது ஜிகர்தண்டா 2 முதல் சிங்கிள் பாடல்!

2014ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போது இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்பராஜ். ஆனால் முந்தைய பாகத்துக்கும் இப்போது உருவாகும் படத்துக்கும் சம்மந்தம் இல்லை என்று கார்த்திக் சுப்பராஜ் கூறியுள்ளார்.

ஜிகர்தண்டா 2 வில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். இருவருக்கும் சம அளவில் முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்பராஜ். படம் பீரியட் திரைப்படமாக உருவாவதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ஷுட்டிங் முடிந்துள்ள நிலையில் தீபாவளிக்குப் படம் ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் இன்று நண்பகல் 12.12 மணிக்கு இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆகவுள்ளதாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அறிவித்துள்ளார். இந்த முதல் சிங்கிள் பாடல் “மாமதுர” என தலைப்பிடப்பட்டுள்ள நிலையில் சந்தோஷ் நாராயணன் இசையில் விவேக் வரிகளில் உருவாகியுள்ளது.