அட்லி – ஷாருக்கானின் ஜவான் பட ரிலீஸ் தேதி மாற்றமா?
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் ஜவான் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு கடந்த ஆண்டுபுனேவில் தொடங்கி நடந்தது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் தவிர அனைத்துக் காட்சிகளும் படமாக்கி முடிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 3 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ரிலீஸுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் இப்போது பட வேலைகள் முடியாததால் ஜூன் 29 ஆம் தேதிக்கு ரிலீஸ் தள்ளிவைக்கப் படலாம் என சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் பாக்யராஜ கதை எழுதி, பாரதிராஜா இயக்கிய ஒரு கைதியின் டைரி படத்தைதான் பட்டி டிங்கரிங் பார்த்து அட்லி ஜவான் படத்தை உருவாக்கி வருவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஒரு கைதியின் டைரி படத்தை பாக்யராஜ் அமிதாப் பச்சன் நடிப்பில் ஆக்ரி ராஸ்தா என இந்தியிலும் இயக்கி வெற்றிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.