1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 5 மே 2023 (09:12 IST)

ஆக்ஸ்ட் மாதத்துக்கு தள்ளிப் போகும் ஷாருக் கானின் ஜவான்?

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் ஜவான் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு கடந்த ஆண்டுபுனேவில் தொடங்கி நடந்தது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் தவிர அனைத்துக் காட்சிகளும் படமாக்கி முடிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 3 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ரிலீஸுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் இப்போது பட வேலைகள் முடியாததால் ஜூன் 29 ஆம் தேதிக்கு ரிலீஸ் தள்ளிவைக்கப் படலாம் என சொல்லப்பட்ட நிலையில் இப்போது அந்த தேதியிலும் ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது.

ஆகஸ்ட் 10 அல்லது 25 ஆம் தேதி ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழிலும் இந்தபடம் ரிலீஸாகும் நிலையில் ஏற்கனவே ஆக்ஸ்ட்டில் ரஜினிகாந்தின் ஜெயிலர் மற்றும் சிவகார்த்திகேயனின் மாவீரன் ஆகிய திரைப்படங்களும் ரிலீஸ் ஆவது குறிப்பிடத்தக்கது.