1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 26 டிசம்பர் 2023 (07:48 IST)

ஷாருக் கானின் டன்கி திரைப்படம் கல்லா கட்டியதா? நான்கு நாள் வசூல் விவரம்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு கடந்த சில ஆண்டுகள் மோசமான ஆண்டாக அமைந்தன. அவர் நடித்த எல்லா படங்களும் ப்ளாப் ஆகின. இதையடுத்து ஒரு நீண்ட பிரேக் எடுத்துக்கொண்டு இப்போது அவர் இப்போது மீண்டும் ஹிட் பாதைக்கு திரும்பியுள்ளார்.

இதையடுத்து 2023 ஆம் ஆண்டில் அவர் நடிப்பில் ரிலீஸ் ஆன பதான் மற்றும் ஜவான் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஹிட்டடித்து 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்தன. இந்நிலையில் அவர் நடிப்பில் ராஜ்குமார் ஹிரானி இயக்கிய டன்கி திரைப்படம் டிசம்பர் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

இந்த படம் ரிலீஸானது முதல் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் முதல் நாளில் உலகளவில் 58 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இப்போது நான்கு நாட்களில் 211 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாம். இந்த ஆண்டு அவர் நடிப்பில் ரிலீஸான ஜவான் மற்றும் பதான் திரைப்படங்களை ஒப்பிட டன்கி திரைப்படம் குறைவான தொகையை வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.