டாட்டூ குத்தாலம் அதுக்குன்னு இப்படியா! ரம்யாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!

Last Modified சனி, 15 ஜூன் 2019 (17:10 IST)
தொலைக்காட்சி  நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்ற தொகுப்பாளினி ரம்யாவிற்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு இடம் உள்ளது. 
 
ஜோடி நம்பர் ஒன், உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, உள்ளிட்ட பல பிரபல நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது மட்டுமல்லாது "ஓகே கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன்" ஆகிய படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா தற்போது கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். 
 
2014ம் ஆண்டு அப்ரஜீத் என்பவரை திருமணம் செய்துகொண்ட ரம்யா பிறகு கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார். விவாகரத்து பெற்றதும் மீண்டும் தனது பணிக்கு திரும்பிய  ரம்யா அடுத்தடுத்து படங்களில் நடிப்பது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என படு பிஸியாக வலம் வருகிறார்.


 
சமீபநாட்களகாக சமூக வளைத்தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் ரம்யா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்தவகையில் சமீபத்தில் உடலில் பல்வேறு பாகங்களில் டாட்டூ குத்திக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்து அதனை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் டாட்டூ குத்தவேண்டியதுதான் அதுக்குன்னு இப்படி உடல் முழுக்கவா என விமர்சித்து வருகின்றனர். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Hello Worldஇதில் மேலும் படிக்கவும் :