புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 13 ஜனவரி 2022 (13:27 IST)

பிக்பாஸ் வீட்டில் சீரியல் நட்சத்திரங்கள்: போரடிப்பதாக ரசிகர்கள் புலம்பல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 100 நாட்களை தாண்டி ஒளிபரப்பாகி வரும் நிலையில் கடந்த சில நாட்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி போரடிப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்களுக்கு எந்தவித டாஸ்க் இல்லை என்பதும் ஏற்கனவே வெளியேறிய போட்டியாளர்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதில் எந்தவித சுவாரசியமும் இல்லை என்றும் வேண்டுமென்றே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இழுத்தடிப்பதாகவும் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர் 
 
இந்த நிலையில் இன்றைய புரொமோ வீடியோவில் சீரியல் நடிகர்கள் நடிகர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் காட்சிகள் உள்ள நிலையில் இந்த காட்சிகள் பொறுமையை சோதிப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்
 
இன்னும் மூன்று நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடையவுள்ள நிலையில் கடைசி நேரத்தில் விறுவிறுப்பாக செல்ல வேண்டிய பிக்பாஸ் நிகழ்ச்சி ஆமை வேகத்தில் செல்வது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது