செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : புதன், 12 ஜனவரி 2022 (20:12 IST)

நீங்களா இப்புடி...? லாஸ்லியாவின் கவர்ச்சியில் வாயடைத்துப்போன ரசிகர்கள்!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா என்பதும் அவர் ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. ஹர்பஜன் சிங் உடன் ப்ரண்ட்ஷிப் படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமாகி ஹிட் அடித்தார். 
 
அதையடுத்து தற்போது கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவி இயக்குநர்களாகப் பணிபுரிந்து வரும் சபரி மற்றும் சரவணன் இருவரும் இணைந்து இயக்கும் கூகுள் குட்டப்பா என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கே.எஸ்.ரவிகுமார் தயாரித்து நடித்தும் வருகிறார். 

இதில் லாஸ்லியாவிற்கு ஜோடியாக பிக்பாஸ் புகழ் தர்ஷன் நடித்து வருகிறார். லாஸ்லியா உடல் எடையை குறைத்து ஸ்லிம் பிட் தோற்றத்திற்கு மாறி அடுத்தடுத்த படங்களில் படு பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது எப்போதும் இல்லாத அளவிற்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் கருப்பு உடையில் முன்னழகை கவர்ச்சியாக காட்டி இணையத்தை தெறிக்கவிட்டுள்ளார்.