1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 12 ஜனவரி 2022 (18:32 IST)

தாமரை ஏற்கனவே ஒருமுறை வெளியேறி இருக்கின்றாரா? அதிர்ச்சி தகவல்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த ஞாயிறன்று வெளியேற்றப்பட்ட தாமரை ஏற்கனவே ஒருமுறை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருப்பதாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
பிக்பாஸ் இறுதிப் போட்டியில் 5 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் கடந்த ஞாயிறு அன்று தாமரை வெளியேற்றப்பட்ட நிலையில் வெளியேறிய தாமரை ரசிகர்களுடன் பேசியபோது ஏற்கனவே ஒருமுறை உடல்நலம் இல்லாமல் இருந்தபோது பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் தனக்கு பிரியங்கா மற்றும் பாவனி உடனிருந்து உதவி செய்தார்கள் என்றும் தெரிவித்துள்ளார் 
 
இதனை அடுத்து ஏற்கனவே ஒருமுறை தாமரை, பிரியங்கா மற்றும் பாவனி ஆகிய மூவரும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி பின் மீண்டும் வீட்டுக்குள் சென்று இருக்கிறார்கள் என்பது தெரியவந்து உள்ளது