வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 12 மே 2021 (15:11 IST)

சக்திமான் முகேஷ் கண்ணா கொரோனாவால் உயிரிழந்தாரா?

கடந்த 90களில் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த தொலைக்காட்சி தொடர் சக்திமான் என்பது பலர் அறிந்ததே. அதில் சக்திமான் வேடத்தில் நடித்த முகேஷ் கண்ணா கொரோனா தொற்றால் உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவிய நிலையில் இதுகுறித்து முகேஷ் கண்ணா விளக்கம் அளித்துள்ளார் 
 
தான் நல்ல ஆரோக்கியமான உடல் நலத்துடன் இருப்பதாகவும் தனக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றும் தன்னை பற்றி வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ரசிகர்களின் ஆசீர்வாதம் காரணமாக தான் நன்றாக இருப்பதாக அவர் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளதை அடுத்து அவரை பற்றிய செய்தி முழுக்க முழுக்க வதந்தி என்பது உறுதியாகி உள்ளது
 
மேலும் இதுபோன்ற வதந்தி பரப்புபவர்களை பிடித்து அடிக்க வேண்டும் என்று முகேஷ் கண்ணன் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார் சக்திமான், மகாபாரதம் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து பிரபலமான நடிகர் முகேஷ் கண்ணா கொரோனாவால் உயிரிழந்ததாக வெளியான வதந்தியால் சமூக வலைதளங்களை பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அவருடைய விளக்கத்தை அடுத்தே ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்