செவ்வாய், 19 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 19 ஆகஸ்ட் 2016 (11:30 IST)

செப்டம்பர் 2 வெளியாகும் கிடாரி

செப்டம்பர் 2 வெளியாகும் கிடாரி

சசிகுமார் நடித்துள்ள கிடாரி திரைப்படம் செப்டம்பர் 2 வெளியாகிறது. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அதிக படங்கள் வெளியாகின்றன. அனைத்துமே முன்னணி நடிகர்களின் படங்கள்.


 


இந்த நெருக்கடியில் சிக்கி சீரழியாமல் ஒரு தமிழ்ப் படம் வெளியானால் அபூர்வம். 
 
விக்ரமின் இருமுகன் படம் செப்டம்பர் 1 வெளியாவதாக இருந்தது. தற்போது அதன் வெளியீட்டை தள்ளி வைத்துள்ளனர். அதனை பயன்படுத்தி செப்டம்பர் 2 -ஆம் தேதி கிடாரியை வெளியிடுகின்றனர். சசிகுமார் தயாரித்து நடித்திருக்கும் கிடாரிதான் சசிகுமாரின் மார்க்கெட்டை நிர்ணயிக்கப் போகிறது. 
 
நிகிலா விமல், நெப்போலியன் ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, பிரசாத் முருகேசன் படத்தை இயக்கியுள்ளார்.