செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (23:05 IST)

ஒரே படத்தில் செந்தில்-சதீஷ். களைகட்ட போகும் காமெடி

பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யாவுடன் 'தானா சேர்ந்த கூட்டம்' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு நகைச்சுவை மட்டுமின்றி குணசித்திர கேரக்டரும் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் சம்பந்தப்பட்ட காட்சியை இயக்குனர் முடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. 



 
 
இந்த நிலையில் செந்தில் இன்னும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 'மெட்ரோ' பட நாயகன் சிரிஷ் நாயகனாகவும், அதே படத்தில் எடிட்டராக பணிபுரிந்த ரமேஷ் பாரதி இயக்குனராகவும் பணிபுரியவுள்ள 'பிஸ்தா' என்ற படத்தில் செந்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளாராம். மேலும் செந்திலுடன் இன்றைய தலைமுறை காமெடி நடிகர் சதீஷும் நடிக்கவுள்ளாராம். இருவரும் சேர்ந்து காமெடியில் கலக்கவுள்ளார்கள் என்றும் இவர்கள் இருவரால் படம் காமெடிக்களை கட்ட போகிறது என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
 
இந்த படத்திற்கு தரண் இசையமைக்கவுள்ளதாகவும் இந்த படத்தில் சிரிஷூகு ஜோடியாக மிருதுளா, அருந்ததி நாயர் என இரண்டு நடிகைகள் நடிக்கவுள்ளதாகவும் இயக்குனர் ரமேஷ் பாரதி தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நமோ நாராயணன், சுவாமி நாதன், யோகிபாபு, செண்ட்ராயன் உள்பட பலர் நடிக்கவுள்ளனர்.