புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 4 ஜூலை 2017 (20:05 IST)

விரைவில் 7 மடங்கு விரிவடையும் சென்னை

சென்னை மாநகரம் தற்போது இருப்பதை விட 7 மடங்கு விரிவடைந்து 8,878 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பெருநகரமாக மாறுகிறது.


 

 
சென்னையில் தொடர்ந்து மக்கள் தொகை அதிகரித்திக் கொண்டே வருகிறது. 2026 ஆம் ஆண்டில் மக்கள் தொகை 1 கோடியே 25 லட்சமாக அதிகரிக்கும் என பெருநகர குழுமம் தெரிவித்துள்ளது. சென்னை புறநகர் பகுதி மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் மக்கள் அங்கும் குடிபெயர்ந்து வருகின்றனர். 
 
இதனால் சென்னை எல்லையை விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் இணைக்கப்படுகின்றன. அரக்கோணம் தாலுக்காவும் இதனுடன் இணைப்படுகிறது. இந்த செய்தியை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 
இதன்மூலம் 1,189 சதுர கி.மீ பரப்பளவில் உள்ள சென்னை மாநகரம் 7 மடங்கு விரிவடைந்து 8,878 சதுர கி.மீ பரப்பளவில் பெருநகரமாக உருவெடுக்கும்.