தளபதி விஜய் சிறந்த நடிகர் - 'G.O.A.T' படத்தில் இணைந்த பிரபல நடிகை
விஜய் நடிப்பில் உருவாகி வரும் G.O.A.T படத்தில் இணைந்துள்ள பிரபல நடிகை பார்வதி நாயர் இப்படம் பற்றி முக்கிய தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் விஜய்68.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து, நடிகர் பிரஷாந்த், பிரபுதேவா, யோகிபாபு, லைலா, சினேகா உள்ளிட்டோர் நடித்து வரும் நிலையில் இப்பட ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் புத்தாண்டையொட்டி, இந்த படத்தின் G.O.A.T - The Greatest Of All Time என்ற டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதையடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் 2வது லுக் போஸ்டரும் வெளியானது.
பிகில் படத்தை அடுத்து, இப்படத்தில் விஜய் விஜய்யின் இரண்டு கேரக்டரில் நடிக்கிறார் என்பதால் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், G.O.A.T படத்தில் இணைந்துள்ள நடிகை பார்வதி நாயர், இப்படம் ஆக்சன் மற்றும் திரில்லன் கலவையாக இருக்கும். இப்படத்தில் எதிர்பாராத டிவிஸ்ட் நிறைந்த படமாக இருக்கும். ஆரம்பம் முதல் இறுதிவரை ரசிகர்களை ஆர்வமுடன் பார்த்து, அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்க்க வைக்கும் படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தளபதி விஜய் சார் ஒரு சிறந்த நடிகர், சினிமாவில் பலரையும் மிஞ்சும் அளவிற்குஓவர் நட்சத்திர நிலையை அடைந்துள்ளார். இப்படத்தில் என் கேரக்டர் வித்தியாசமாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.