புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (15:51 IST)

தவமிருந்து பெற்ற மகனுக்கு மாவீரனின் பெயர் சூட்டிய சென்றாயன்!

தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக அறிமுகமாகி வில்லன், குணசித்திர வேடம் உள்ளிட்டவற்றில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சென்றாயன். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று இன்னும் மக்களிடம் பிரபலமடைந்தார் .

பொல்லாதவன், சிலம்பாட்டம், ஆடுகளம், மூடா்கூடம் உள்ளிட்ட படங்களில் நடித்த சென்றாயன் ஜீவா நடித்த ரௌத்ரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடந்த 2014ம் ஆண்டு  கயல்விழி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட சென்றாயனுக்கு 4 ஆண்டுகள் கழித்து ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் தற்போது பேட்டி ஒன்றில் பேசிய சென்றாயன், " தனது மகனுக்கு "செம்பியன்" என்று பெயர் வைத்துள்ளதாக தெரிவித்தார். அதாவது, பொன்னியின் செல்வன் கதையில் வரும் செம்பியன் மாதேவியின் பெயர் என்று கூறியுள்ளார்.