1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (13:03 IST)

விருதுகளை வாரிக் குவித்த “மாமனிதன்”! – சீனுராமசாமி ஹேப்பி ட்வீட்!

சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான மாமனிதன் திரைப்படம் சர்வதேச விருது விழாவில் 3 விருதுகளை வென்றுள்ளது.

விஜய் சேதுபதி நடித்து சீனு ராமசாமி இயக்கி சமீபத்தில் வெளியான படம் “மாமனிதன்”. காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்திருந்தனர்.

இந்த படம் வெளியாகி விமர்சன ரீதியாக பெரும் வெற்றிபெற்ற நிலையில் டோக்கியோவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலும் சிறந்த ஆசியப்படத்திற்கான கோல்டன் விருதை பெற்றது.

இந்நிலையில் தற்போது நடந்த தாகூர் சர்வதேச திரைப்பட விழாவில் “மாமனிதன்” திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த சாதனை, சிறந்த விமர்சகர் தேர்வு ஆகிய 3 பிரிவுகளில் விருதை வென்றுள்ளது. இதுகுறித்து இயக்குனர் சீனு ராமசாமி தனது ட்விட்டரில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.