லியோ படத்தின் பெயரை மாற்ற வேண்டும்… விஜய்க்கு அட்வைஸ் சொன்ன சீமான்!
விஜய் அடுத்து நடிக்கும் லியோ படத்தின் ப்ரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரல் ஆனது இந்த படத்தின் டைட்டில் வீடியோ வைரல் ஆனது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர். படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், காஷ்மீருக்கு சில நாட்களுக்கு முன்னர் பயணம் செய்தது. இந்நிலையில் இப்போது திட்டமிட்ட காட்சிகளை எடுத்து முடிப்பதற்கு மோசமான வானிலை காரணமாக மிகுந்த சிரமத்தை சந்திப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும் படக்குழு அங்கேயே தங்கி இப்போது ஷூட்டிங்கை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது விஜய் மற்றும் கௌதம் மேனன் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார் லோகேஷ்.
இந்நிலையில் லியோ என படத்துக்கு ஆங்கிலத்தில் பெயர் வைத்துள்ளது குறித்து பேசியுள்ள இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் “நாமதான் படம் பாக்குறோம். நம்ம தமிழ் மொழி சிதையாமல் நாமதான் பாத்துக்கொள்ள வேண்டும். அந்த பொறுப்பு விஜய் தம்பிக்கு இருக்கு. முன்பெல்லாம் தமிழில் பெயர் வச்சாங்க. இப்பதான் பிகில், விசில்-னு வச்சிட்டு இருக்காங்க” எனக் கூறியுள்ளார்.