வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 18 பிப்ரவரி 2019 (12:34 IST)

வெளிநாட்டில் ஆர்யா - ஷாயிஷா செய்த வேலையை பாருங்க! லேட்டஸ்ட் புகைப்படம் இதோ!

வருங்கால மனைவியுடன் லூட்டியடிக்கும் ஆர்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது!


 
தமிழ் சினிமாவில் தற்போதைய ஹாட் காதல் ஜோடிகளாக வலம் வரும் ஆர்யா - ஷாயிஷா காதல் கிசு கிசுக்கப்பட்டதிலிருந்து இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகின்றனர். 
 
நடிகர் ஆர்யா காதலிக்கிறேன் என்று சொன்னாலும் "அட சரிப்பா அதுக்கென்ன இப்போ" என கேட்கும் அளவிற்கு கேட்பவர்களுக்கே வெறுத்துவிட்டது. காரணம் "எங்க வீட்டு மாப்பிள்ளை" நிகழ்ச்சியில்  அவர் செய்த அலப்பறைகள் தான் ஆனால், கடைசியில் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அத்தனை பெண்களுக்கும் அல்வா கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார் ஆர்யா. 
 
தற்போது ஆர்யாவின் திருமணம் நடிகை ஷாயிஷாவோடு உறுதியாகியுள்ளது. கஜினிகாந்த் படத்தில் நடித்த போது இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 
 
இந்நிலையில், காதலர் தினத்தன்று தங்களின் திருமணத்தை நடிகர் ஆர்யா, சாயிஷா டுவிட்டர் மூலம் அறிவிப்பை வெளியிட்டனர். அதில், வரும் மார்ச் மாதத்தில் சாயிஷாவை திருமணம் செய்து கொள்ளயிருப்பதாக தெரிவித்திருந்தனர். 
 
இதற்கிடையில் மார்ச் மாதம் 10ம் தேதி ஹைதராபாத்தில் வைத்து ஆர்யா – சாயிஷா திருமணம் நடக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்லாமிய முறைப்படி நடைபெறும் இந்த திருமணம் மார்ச் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் 2 நாட்கள் நடைபெறும் எனத் தெரிகிறது.


 
இந்நிலையில் தற்போது  நடிகர் ஆர்யா, சாயிஷா ஆகியோர் சூர்யா, மோகன்லால் நடிக்கும் காப்பான் படித்தில் நடித்துவருகின்றனர். வெளிநாட்டில் இவர்கள் எடுத்துக்கொண்ட போட்டோ தற்போது சமூக வலைதளத்தில் பெரும் வைரலாகி வருகிறது.