புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 28 நவம்பர் 2017 (17:44 IST)

‘பத்மாவதி’ படம் பற்றி அரசு பதவிகளில் இருப்பவர்கள் கருத்து தெரிவிக்க கூடாது - உச்சநீதிமன்றம்

‘பத்மாவதி’ படம் குறித்து அரசு பதவிகளில் இருப்பவர்கள் கருத்து தெரிவிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.


 
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ள ‘பத்மாவதி’ படத்துக்கு, நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால், படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளிலும் படத்தை ரிலீஸ் செய்ய தடைவிதிக்க வேண்டும் என மனோகர் லால் சர்மா என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், “படம் குறித்து திரைப்பட தணிக்கை வாரியம் இறுதி முடிவு எடுக்காத நிலையில், அரசு பதவிகளில் இருப்பவர்கள் படத்தைப் பற்றி கருத்து கூறுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அவர்களுடைய கருத்து, தணிக்கை வாரியம் முடிவெடுக்க உறுதுணையாக அமையலாம். அப்படி கருத்து கூறுவது சட்டத்திற்குப் புறம்பானது” எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளன.