ரொமான்ஸ் காட்சிகளில் அவர் கை நடுங்கியது; அமலாபால் ஓபன் டாக்
சுசி கணேசன் இயக்கத்தில் திருட்டு பயலே 2 படத்தில் பாபி சிம்ஹா, பிரச்சனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திருட்டு பயலே படத்தின் முதல் பாகத்தில் மாளவிகா தன் கணவருக்கு தெரியாமல் அபாஸ் உடன் கள்ளத்தொடர்பில் இருப்பதுபோல் கதை இருந்தது.
இந்தப் படத்தின் ட்ரெய்லர் சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. முதல் பாகம் கருப்பொருளினால் சர்ச்சையை உண்டாக்கிய அதேநேரத்தில் வணிகரீதியாகவும் வெற்றி பெற்றது. அதன் இரண்டாம் பாகத்திலும் கள்ளக்காதல் மற்றும் அதன் எதிரொலியால் நிகழும் சம்பவங்கள்தான் கதை எனச் சொல்லப்படுகிறது.
இதில் பாபி சிம்ஹா போலீசாக நடித்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு வாட்ஸ்அப்பில் வைரலாகப் பரவிய ஆபாச ஆடியோவில், பாதிக்கப்பட்ட பெண்ணுடன் ஒரு எஸ்.ஐ பேசுவது பதிவு செய்யப்பட்டிருக்கும். அதே மாதிரியான காட்சி இந்தப் படத்திலும் இடம்பெற்றிருக்கிறது. ரொமான்ஸ் காட்சிகளில் நடித்தது குறித்து அமலாபாலிடம் கேட்டதற்கு, "அந்த காட்சிகளில் நடிக்கும்போது பாபி சிம்ஹாவுக்கு கை நடுங்க ஆரம்பித்து விடும் என்றும், ஆனால், நான் தயக்கமின்றி நடித்தேன்" எனக் கூறியுள்ளார்.