புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (12:32 IST)

எஸ்.பி.பிக்கு கொரோனா நெகட்டிவ்? நான் கூறவில்லை - மகன் எஸ்.பி சரண்!

பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் கடந்த ஐந்தாம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமாக வேண்டும் என ஒட்டுமொத்த திரையுலகமே பிரார்த்தனை செய்தது.

தனது தந்தையின் உடல்நிலை குறித்து அவ்வப்போது அப்டேட் செய்து வருகிறார் எஸ் பி பியின் மகன் சரண். அந்த வகையில் தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது என தெரிவித்து தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது என்று கூறியுள்ளார்.


ஆனால், தற்ப்போது இதை நான் கூறவில்லை என எஸ்.பிசரண் தெரிவித்துள்ளார். எஸ்.பி.பி க்கு கொரோனா நெகட்டிவ் என்ற தகவலில் உண்மை தன்மை இல்லை.அத்துடன், இது குறித்து எந்த ஒரு மருத்துவ அறிக்கையும் வெளிவரவில்லை. எஸ்பிபி மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க ஆரம்பித்த நாள் முதல் அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து முறையான மருத்துவ அறிக்கை வெளியிட்டு வந்த மருத்துவமனை தற்போது அவருக்கு கொரோன நெகட்டிவ் என்ற ரிசல்ட்டை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது கவனிக்கப்படவேண்டியது.