60 வயது நடிகருக்கு ஜோடியாகும் ஆர்யா மனைவி!
ஆர்யா மனைவி சாயிஷா தெலுகில் முன்னணி நடிகர் ஒருவருடன் ஜோடியாக் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தெலுங்கு முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் போயபடி சீனு இயக்கத்தில் ஒரு படம் உருவாக உள்ளது. இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் என கூறப்பட்டது. இந்நிலையில் இதற்காக பல்வேறு முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியது படக்குழு.
கடைசியாக இவருக்கு ஜோடியாக சாயிஷா சைகல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை அதிகாரபூர்வமாகப் படக்குழு அறிவித்துள்ளது. 60 வயதாகும் பாலகிருஷ்ணாவுக்கு 23 வயதான சாயிஷா ஜோடியாக நடிப்பது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.