1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2023 (08:39 IST)

யார் சூப்பர் ஸ்டார்… பட விழாவில் சத்யராஜ் சொன்ன கருத்து!

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் யார் சூப்பர் ஸ்டார் என்பது குறித்து அதிகளவிலான சர்ச்சைகள் நடந்து வருகின்றன. ரஜினிதான் என்றென்றும் சூப்பர் ஸ்டார் என்றும், விஜய்தான் இப்போதைய சூப்பர் ஸ்டார் என்றும் ரசிகர்கள் மாறி மாறி சண்டை போட்டுக்கொண்டு வருகின்றனர்.

சமீபகாலமாக விஜய்யின் படங்கள் பெரியளவில் வசூல் செய்வதால் இந்த ஒப்பீடு தோன்றியுள்ளது. இதைப் பற்றி பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. இது சம்மந்தமாக ஜெயிலர் படத்தின் ஆடியோ விழாவில் பேசிய ரஜினிகாந்த் சொல்லிய கழுகு பருந்து கதையும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த அங்காரகன் பட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மூத்த நடிகர் சத்யராஜிடம் இதுபற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சத்யராஜ் “சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த்தான். அதை மாற்றக் கூடாது” எனக் கூறியுள்ளார்.