புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (16:49 IST)

75 நாட்கள் அப்போலோவில் நடந்தது என்ன? உருவாகும் சசிலலிதா!

ஏற்கனவே நித்யா மேனன் நடிப்பில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு, கங்கனா நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில்  ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு, கவுதம் மேனன் இயக்கத்தில் ஜெயலலிதானவின் வாழ்க்கை வரலாறு வெப் சீரிஸ் என ஜெயலலிதா பயோபிக் உருவாக உள்ளது. 
 
இந்நிலையில், தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தி தலைவர் ஜெகதீஸ்வர ரெட்டி, ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றை படமாக இயக்க உள்ளாராம். இவர் இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும், தலையும் வெளியிட்டுள்ளார். 
 
மேலும், இந்த படத்தில் ஜெயலலிதா - சசிகலா இடையிலான உறவையும், ஜெயலலிதாவின் சினிமா, அரசியல் வாழ்க்கையையும் மையப்படுத்தி காட்டப்படுமாம். இந்த படத்திற்கு சசிலலிதா என பெயரிட்டுள்ள அவர், அப்போலீவில் 75 நாட்கள் என்ன நடந்தது என்பதையும் விரிவாக படம்பிடிக்கவுள்ளாராம்.