செவ்வாய், 5 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 18 நவம்பர் 2022 (16:07 IST)

குற்றப் பரம்பரையில் இருந்து சசிகுமாரை நீக்கிய ஓடிடி? பின்னணி என்ன?

இயக்குனர் சசிகுமார் நீண்ட ஆண்டுகளாக திரைப்படங்கள் எதுவும் இயக்காமல் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

குற்றப்பரம்பரையினர் பற்றிய கதையை பல வருடங்களாக எடுக்கவேண்டும் என இயக்குனர் பாரதிராஜா முயற்சி செய்தார். சிவாஜி மற்றும் சரத்குமார் நடிப்பில் பூஜை நடைபெற்று போஸ்டரும் வெளியானது. ஆனால் தடைபட்டது. பின்னர் மீண்டும் ஒரு முறை முயன்றார். அப்போதும் அவரால் படமாக்க முடியவில்லை. இதேபோல இயக்குனர் பாலாவும் குற்றப்பரம்பரையினர் பற்றிய கதையை திரைப்படமாக்க உள்ளதாக அறிவித்தார். ஆனால் அதுவும் நிறைவேறவில்லை.

இந்நிலையில் இப்போது இயக்குனரும் நடிகருமான சசிகுமார் அது சம்மந்தமான கதையை வெப் சீரிஸாக உருவாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான கதையை எழுத்தாளர் வேல ராமமூர்த்தி எழுத உள்ளதாகவும், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. சசிகுமாரே அதில் நாயகனாக நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளதாக தகவல்கள் இப்போது வெளியாகி வருகின்றன. விரைவில் இந்த சீரிஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் சம்மந்தப்பட்ட ஓடிடி, இப்போது இயக்குனர் பொறுப்பில் இருந்து சசிகுமாரை நீக்கிவிட்டு, வேறு இயக்குனரை நியமிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.