ஞாயிறு, 14 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 18 அக்டோபர் 2023 (13:11 IST)

கழுகு இயக்குனரின் படத்தில் நடிக்கும் சசிகுமார்! லேட்டஸ்ட் அப்டேட்!

தொடர்ந்து தோல்விப் படங்களாக கொடுத்து வந்த சசிகுமாருக்கு அயோத்தி திரைப்படம் வெற்றி படமாக அமைந்தது. இதையடுத்து இப்போது அவர் நடிப்பதைக் குறைத்துக்கொண்டு மீண்டும் இயக்குனர் ஆகும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இப்போது சசிகுமார் குற்றப் பரம்பரையினர் சம்மந்தமான கதையை வெப் சீரிஸாக உருவாக்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்கான கதையை எழுத்தாளர் வேல ராமமூர்த்தியின் நாவலில் இருந்து தழுவி உருவாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது அவர் நடித்துவரும் புதிய படத்தை சத்யசிவா இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தை கழுகு திரைப்படத்தை இயக்கிய சத்யசிவா இந்த படத்தை இயக்குகிறார். 1990 களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தை இயக்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார் . 90 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள ஷூட்டிங் கேரளாவில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.