செவ்வாய், 6 ஜூன் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified திங்கள், 27 மார்ச் 2023 (08:45 IST)

மீண்டும் இயக்குனராகும் சசிகுமார்.. முக்கிய வேடத்தில் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்!

இயக்குனராக அறிமுகமாகி, நடிகராக வெற்றிகரமாக வலம் வந்த சசிகுமார், சில ஆண்டுகளுக்குப் பிறகு அயோத்தி படம் மூலமாக ஹிட் கொடுத்து கம்பேக் கொடுத்துள்ளார். இந்நிலையில் இப்போது அவர் மீண்டும் ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இப்போது சசிகுமார் குற்றப் பரமபரையினர் சம்மந்தமான கதையை திரைப்படமாக உருவாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான கதையை எழுத்தாளர் வேல ராமமூர்த்தி எழுத உள்ளதாகவும், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதில் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ள நிலையில், பாலிவுட் இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் மையக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈசன் படத்துக்குப் பிறகு 13 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தை சசிகுமார் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.