திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : சனி, 25 மார்ச் 2023 (08:42 IST)

டாஸ்மாக் விவகாரத்தில் பொய் பிரசாரம் செய்யப்படுகிறது: அமைச்சர் செந்தில் பாலாஜி

Senthil Balaji
டாஸ்மாக் விவகாரத்தில் பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மது அருந்துவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்றும் அதனால் தான் டாஸ்மாக் வருவாய் உயர்ந்துள்ளது என்றும் எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் இது குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்தார். தமிழகத்தில் மது நுகர்வோரின் எண்ணிக்கை உயர்ந்ததால் வருவாய் அதிகரிக்கவில்லை என்றும் விலை உயர்வின் காரணமாக தான் வருவாய் அதிகரிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
ஆனால் அரசுக்கு டாஸ்மாக் மூலமாக அதிக வருவாய் கிடைப்பதாக பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran