திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 3 அக்டோபர் 2018 (21:55 IST)

ரஜினியின் 'பேட்ட' படத்தில் இணைந்த இன்னொரு ஹீரோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் 'பேட்ட' படத்தில் ஏற்கனவே பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். ஒரு ரஜினி படத்தில் இத்தனை பிரபலங்கள் என்பது ஆச்சரியமான விஷயம். இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் இன்னொரு பிரபல நடிகர் இணைந்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தின் உச்சத்திற்கே அழைத்து சென்றுள்ளது.

'பேட்ட' படத்தில் ரஜினியுடன் சிம்ரன், த்ரிஷா, விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருவது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது இந்த பட்டியலில் சசிகுமார் இணைந்துள்ளார்.

சசிகுமாருக்கு இந்த படத்தில் சின்ன கேரக்டர் என்றாலும் மனதில் நிற்கும் கேரக்டர் என்றும், ரஜினிக்கும் அவருக்கும் இணைந்து முக்கிய காட்சிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.