வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 3 அக்டோபர் 2018 (11:55 IST)

இந்தியாவை மீண்டும் ஆங்கிலேயர்களே ஆள வேண்டும் - காந்தியின் செயலாளர் பரபரப்புப் பேட்டி

இந்தியாவை மீண்டும் ஆங்கிலேயர்களே ஆள வேண்டும் என மகாத்மா காந்தியின் செயலாளர் கல்யாணம் கூறியுள்ளார்.  
இந்தியா முழுவதிலும் நேற்று காந்தியின் 150வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் டெல்லியில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் அவருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
 
இந்நிலையில் மகாத்மா காந்தியின் செயலாளராக இருந்த கல்யாணம், செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்தியாவில் எல்லா துறைகளிலும் ஊழல் மற்றும் லஞ்சம் தலை விரித்தாடுகிறது. மகாத்மா காந்தி கஷ்டப்பட்டு வாங்கித் தந்த சுதந்திரத்தை பலர் மதிப்பதில்லை.
இதற்கு ஆங்கிலேயர் ஆட்சியே எவ்வளவோ மேல். அவர்கள் நம்மிடம் இருந்து திருடினார்கள் தான், ஆனால் அவர்கள் நம்மை ஆண்ட போது எந்த துறையிலும் ஊழல் இல்லை, லஞ்சம் இல்லை. தவறு செய்வோர் உடனடியாக தண்டிக்கப்பட்டார்கள். 
 
ஆனால் இப்பொழுது அப்படியா, அரசு அலுவலகங்களில் லஞ்சம் தரவில்லை என்றால் வேலை நடப்பதில்லை. இதையெல்லாம் பார்க்கும்போது தான் மீண்டும் ஆங்கிலேயர்களே நம்மை ஆட்சி செய்தால் நன்றாக இருக்கு என தோன்றுகிறது, காந்தியே இருந்திருதாலும் அவரும் இதைத் தான் கூறியிருப்பார் என அவர் கூறினார்.