1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 30 செப்டம்பர் 2023 (15:13 IST)

சசிக்குமாரின் அடுத்த பட போஸ்டர் ரிலீஸ்

sasikumar
சசிக்குமார் நடிப்பில்  உருவாகவுள்ள புதிய பட போஸ்டர் வெளியாகியுள்ளது.  

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சசிகுமார். இவர் சுப்பிரமணியபுரம், ஈசன்,  குட்டிப்புலி, தாரை தட்டப்பட்டை, சுந்தரபாண்டியன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படம் அயோத்தி. இப்படம் ரசிகர்களை நெகிழவைத்தது. வெற்றிப்படமாகவும் அமைந்தது.

இந்த  நிலையில், சசிக்குமார் நடிப்பில் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காவல்துறை உங்கள் நண்பன் என்ற படத்தின் மூலம் இயக்குனரான  RDM இயக்கத்தில் சசிக்குமார் நடிக்கும் எவிடன்ஸ் என்ற படத்தின்  ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இது வைரலாகி வருகிறது.