சர்கார் ஹெச்.டி பிரிண்ட் கன்ஃபார்ம்: தமிழ் ராக்கர்ஸ் மீண்டும் மிரட்டல்

tr
Last Updated: செவ்வாய், 6 நவம்பர் 2018 (13:41 IST)
சர்கார் திரைப்படத்தின் ஹெச்.டி பிரிண்டை விரைவில் வெளியிடுவோம் என தமிழ்ராக்கர்ஸ் மீண்டும் டிவிட்டரில் பதிவிட்டிருக்கிறது.
 
முருகதாஸ் - விஜய் கூட்டணியில் பிரம்மாண்டமாய் உருவாகியுள்ள சர்கார் திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது. சர்கார் திரைப்படத்தை இணையதளத்திலும், கேபிள் டிவி ஆப்ரேட்டர்களும் வெளியிடக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இதெற்கெல்லாம் அடங்காத தமிழ் ராக்கர்ஸ் சர்க்கார் படத்தை விரைவில் ஹெச்.டி ப்ரிண்ட்டில் வெளியிட உள்ளோம் என டிவிட்டரில் நேற்று பதிவிட்டது. இதற்கு சவால் விடும் விதமாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளார் சங்கம் முடிந்தால் செய்து பாருங்கள் என கூறியிருந்தது.
 
இந்நிலையில் மீண்டும் தமிழ் ராக்கர்ஸ் பெயரில் டிவிட்டரில் சர்கார் படத்தின் எச்.டி.ப்ரிண்ட் இன்றே வெளியாகும் என்று மிரட்டல் விடுத்துள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :