1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick

உங்க நல்ல எண்ணத்துக்கே முதல் வாழ்த்துகள்! – ஜெய்பீம் குறித்து சரத்குமார் அறிக்கை!

சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்தை பார்த்த ச.ம.க தலைவர் சரத்குமார் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நடிகர் சூர்யா நடிப்பில் தா.செ.ஞானசேகர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஜெய்பீம். பழங்குடி மக்களுக்கான நீதியை வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரித்துள்ளது. இந்த படம் அமேசான் ஓடிடியில் வெளியானது.

விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த படம் சில சர்ச்சைகளையும் சந்தித்துள்ளது. இந்நிலையில் படம் பார்த்த சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார் படத்தை பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ”நீதியரசர் சந்துருவின் சமூக அக்கறையை உலகம் மறந்துவிடக்கூடாது என்ற நோக்கிலும், சமூக அநீதிகளை பிரபலங்கள் எந்த தயக்கமும் இல்லாமல் வெளிப்படுத்த வேண்டும் என்றும் வெளியாகியுள்ளது ஜெய்பீம். சூர்யாவின் உன்னத எண்ணத்திற்கு முதலில் பாராட்டுகள்” என தெரிவித்துள்ளார்.