திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (09:58 IST)

விஜய்யை சூப்பர் ஸ்டார் என சொன்னேன்… அத்ற்காக ரஜினியிடம் பேசினேன் –சரத்குமார் விளக்கம்!

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் யார் சூப்பர் ஸ்டார் என்பது குறித்து அதிகளவிலான சர்ச்சைகள் நடந்து வருகின்றன. ரஜினிதான் என்றென்றும் சூப்பர் ஸ்டார் என்றும், விஜய்தான் இப்போதைய சூப்பர் ஸ்டார் என்றும் ரசிகர்கள் மாறி மாறி சண்டை போட்டுக்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சரத்குமார் வாரிசு படத்தின் இசைவெளியீட்டின் போது “விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று பேசியது” சலசலப்பை உண்டாக்கியது. இந்நிலையில் அது குறித்து இப்போது விளக்கம் அளித்துள்ளார் சரத்குமார்.

அதில் ‘நான் சூப்பர் ஸ்டார் பட்டம் தொடர்பாக பேசியது குறித்து ரஜினிகாந்திடம் விளக்கம் அளித்துவிட்டேன். ரசிகர்களிடம் அவருக்கு உள்ள புகழை குறிப்பிடவே விஜய்யை சூப்பர் ஸ்டார் என்றேன். அவர் இதுபற்றி எல்லாம் நீங்கள் கவலைப்படவேண்டாம் எனக் கூறிவிட்டார்” எனக் கூறியுள்ளார்.