ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (08:31 IST)

ஜெயிலர் ரிலீஸுக்கு முன்பு இமயமலைக்கு செல்லும் ரஜினிகாந்த்!

ரஜினிகாந்த் நெல்சன் கூட்டணியில் தற்போது ஜெயிலர் திரைப்படம் உருவாகி ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷ்ராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் என பெரிய பட்டாளமே நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி ஹிட்டாகியுள்ளன. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரல் ஆகியுள்ளது.

இன்னும் இரண்டு தினங்களில் இந்த படம் ரிலீஸாக உள்ள நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இமயமலைக்கு பயணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெயிலர் படத்துக்கு தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நல்ல முன்பதிவு நடந்து வருகிறது. தமிழகத்தில் மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் அனைத்து டிக்கெட்களும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.