செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 1 டிசம்பர் 2019 (19:49 IST)

அத்துமீறிய ரசிகர்: புன்சிரிப்புடன் விலகிய பிரபல நடிகை!

நடிகைகளை பொது இடத்தில் பார்த்தால் அவர்களுடன் செல்பி எடுப்பது ரசிகர்களின் வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகரான சயிப் அலிகான் மகள் சாரா அலிகான் சமீபத்தில் விடுமுறைக்காக அமெரிக்கா சென்றிருந்தார்
 
இவர் இன்று மும்பை திரும்பிய நிலையில் மும்பை விமான நிலையத்தில் சாராவை கண்ட சில ரசிகர்கள் அவருடன் செல்பி எடுக்க விரும்பினர். இதனை அடுத்து பொறுமையாக ஒவ்வொரு ரசிகருக்கும் செல்பி எடுக்க அவர் அனுமதி கொடுத்து போஸ் கொடுத்தார் 
 
இந்த நிலையில் ஒரு ரசிகர் திடீரென அத்துமீறி சாராவின் தோளில் கை போட்டார். இதனை சற்றும் எதிர்பார்க்காத சாரா, புன்சிரிப்புடன் மென்மையாக கண்டித்து அவரிடமிருந்து விலகி நின்று அவருக்கும் போஸ் கொடுத்தார்
 
ரசிகர் அர்த்தத்தை அத்துமீறியபோதிலும் அவரை கண்டிக்காமல் அந்த ரசிகர் மீது மென்மையான கோபத்தை மட்டும் வெளிக்காட்டி பொறுமையாக நடந்து கொண்ட சாராவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது