1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 30 நவம்பர் 2019 (14:07 IST)

கதறி அழுத கார்த்தி: திடீர் மரணத்தால் உருகுலைந்த குடும்பம்

நடிகர் கார்த்தி தனது ரசிகர் ஒருவரின் இறுதி அஞ்சலியில் கண்ணீர் விட்டு கதறி அழுத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
பிரபல நடிகர் கார்த்தி, மக்கள் நல மன்றத்தின் சென்னை மாவட்ட அமைப்பாளர் வியாசை நித்தியா உளுந்தூர்பேட்டை அருகே நடந்த சாலை விபத்தில் அகால மரணம் அடைந்தார். 
 
தனது ரசிகர் மன்றத்தின் அமைப்பாளரின் இறுதிச்சடங்கில் கலந்துக் கொண்ட கார்த்தி அவரது உடலை பார்த்து கண்ணீர்விட்டு அழுத நடிகர் கார்த்தி நேரில் அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
 
இதற்கு முன்னர் இதே போல சாலை விபத்தில் உயிரிழந்த தனது ரசிகரின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய போது அவர் அழுதார் என்பது குறிப்பிடத்தக்கது.