வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 11 டிசம்பர் 2019 (19:49 IST)

நாளை தர்பார் ட்ரெய்லர்! – உண்மையை கசியவிட்ட சந்தோஷ் சிவன்!

நாளை ரஜினிகாந்த் பிறந்தநாளில் தர்பார் ட்ரெய்லர் வெளியாகலாம் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழ்நிலையில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து 2020 பொங்கலுக்கு வெளியாக உள்ள திரைப்படம் ‘தர்பார்’. முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அனிருத் இசையமைத்த பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பட்டித்தொட்டியெல்லாம் ஹிட் அடித்து கொண்டிருக்கும் நிலையில் ரசிகர்கள் தர்பார் ட்ரெய்லருக்காக தீவிரமான ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். நாளை ரஜினிகாந்த் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் அவரது பாட்ஷா, சிவாஜி ஆகிய படங்கள் மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகின்றன. இந்நிலையில் தர்பார் ட்ரெய்லரும் வெளியாகலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அந்த எதிர்பார்ப்புக்கு தூபம் ஏற்றுவது போல் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். அந்த பதிவில் ”மிகப்பெரும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரஜினி சார் மற்றும் தர்பார் ட்ரெய்லருக்காகவும், உங்களுக்கு வயதாகவே இல்லை” என்று பதிவிட்டுள்ளார்.

இதன்மூலம் தர்பார் ட்ரெய்லர் சர்ப்ரைஸாக நாளை வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. தர்பார் ட்ரெய்லர் குறித்த ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன.