திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 8 மார்ச் 2023 (08:17 IST)

சார்பட்டா 2 பற்றி ட்வீட் செய்த சந்தோஷ் நாராயணன்… குஷியான ரசிகர்கள்!

தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தகுந்த இயக்குனர்- இசையமைப்பாளர் வெற்றிக் கூட்டணியில் கடந்த சில ஆண்டுகளாக பரபரப்பாக பேசப்பட்டு வந்த கூட்டணி பா ரஞ்சித்- சந்தோஷ் நாராயணன் கூட்டணி. இவர்கள் இணைந்து உருவாக்கிய அனைத்துப் படங்களின் பாடல்களும் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றன. ஆனால் சார்பட்டா பரம்பரைக்குப் பிறகு இந்த கூட்டணி பிரிந்தது. கடைசியாக அவர் இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்துக்கு தென்மா இசையமைப்பாளராக பணியாற்றினார். இந்நிலையில் விக்ரம் 61 படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சந்தோஷ் நாராயணன் மற்றும் ரஞ்சித் ஆகியோருக்கு இடையே எழுந்த கருத்து வேறுபாட்டால்தான் இருவரும் இணைந்து பணியாற்றுவதில்லை என்று தகவல்கள் பரவின. இதை உறுதிப்படுத்துவது இயக்குனர் ரஞ்சித்தும் ஒரு பேட்டியில் ‘தங்களுக்குள் சிறு சண்டை உள்ளதாக” கூறியிருந்தார்.

இந்நிலையில் இவர்கள் கூட்டணியின் கடைசி படமாக அமைந்த சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகம் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பா ரஞ்சித் ஆர்யா தவிர வேறு எந்த கலைஞர்களின் பெயரும் அறிவிக்கப்படவில்லை. இதனால் முதல் பாகத்துக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன், இரண்டாம் பாகத்துக்கும் இசை அமைப்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில் சார்பட்டா 2 படம் பற்றிய அப்டேட்டை பகிர்ந்துள்ள சந்தோஷ் நாராயணன் “வானம் விடுஞ்சுடுச்சு காசுடா மோளத்த” என ட்வீட் செய்துள்ளார். இதன் மூலம் இரண்டாம் பாகத்தில் அவர் இருப்பது உறுதியாகியுள்ளது என ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.