1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 20 ஏப்ரல் 2024 (11:38 IST)

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு!

நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு சர்வைவல் ஆகிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவர் நடித்த டிடி ரிட்டர்ன்ஸ் மற்றும் வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதையடுத்து சந்தானம் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார்.

அப்படி சந்தானம் நடிப்பில் அடுத்து உருவாகும் இங்க நாங்கதன் கிங்கு என்ற படத்தை தயாரிப்பாளர் அன்புச்செழியன் தயாரித்து வருகிறார். இந்த படத்தை இந்தியா பாகிஸ்தான் பட இயக்குனர் ஆனந்த் இயக்கயுள்ளார்.

டி இமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை உரிமையை சரிகம பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஏப்ரலில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இப்போது மே மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மே 10 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.