திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 18 ஏப்ரல் 2024 (18:01 IST)

கமல்ஹாசனால் என் பட ரிலீஸ் தாமதமானது: சீனுராமசாமி திடீர் குற்றச்சாட்டு..!

சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான 'இடம் பொருள் ஏவல்’ என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் ரிலீசாகாமல் உள்ளது என்ற நிலையில் இந்த படம் காலதாமதம் ஆவதற்கு கமல்ஹாசன் தான் காரணம் என்று அவர் பகீர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். 
 
இயக்குனர் லிங்குசாமி தயாரிப்பில் உருவான இடம்பொருள் ஏவல் திரைப்படம் உத்தமவில்லன் படத்திற்கு முன்பே ரிலீஸ் ஆக வேண்டிய அது என்றும் ஆனால் உத்தம வில்லன் முதலில் ரிலீஸ் ஆகி லிங்குசாமிக்கு நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டதால் இடம் பொருள் ஏவல் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் சென்று விட்டது என்றும் இயக்குனர் சீனு ராமசாமி தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: திரு லிங்குசாமி அவர்கள் தயாரித்த ’இடம் பொருள் ஏவல்’ படம் அவர் தயாரித்த ’உத்தம வில்லன்’ படத்திற்கு முந்தி வந்திருக்க வேண்டிய படம், ஆனால் ’உத்தம வில்லன்’ முந்திவிட்டது. என் படம் நின்று விட்டது.
 
கமல் அண்ணன் வாக்கு தந்தால் அதை நிறைவேற்றுவார் என்பது  எல்லோருக்கும் தெரியும். அவர் ஒப்பந்தப்படி நிச்சயம் திருப்பதி பிரதர்ஸ்  கம்பெனிக்கு ஒரு படம் செய்வார் என நம்புறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva