1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (16:13 IST)

சூர்யா, கார்த்தி படத்தயாரிப்பாளருக்கு கொரோனா: கோலிவுட் அதிர்ச்சி

தமிழகத்தில் தினந்தோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் பொதுமக்கள் மட்டுமின்றி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் என பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக திரையுலகைச் சேர்ந்தவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர் சுவாமிநாதன் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு காலமானார் என்ற செய்தியையும் பார்த்தோம் 
 
இந்த நிலையில் தற்போது சூர்யா, கார்த்திக் ஆகிய பிரபலங்களை வைத்து அதிக படங்களை தயாரித்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. இருப்பினும் இந்த தகவல் இன்னும் சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது