1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (11:18 IST)

நடிகை சஞ்சனா கல்ராணி போதை பொருள் பயன்படுத்தினார்!? – ஆய்வில் உறுதி!

போதை பொருள் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகைகள் இருவர் போதைப்பொருள் பயன்படுத்தியது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

திரையுலகில் போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பதாக கூறப்படும் நிலையில் கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் திரைத்துறையினருக்கு சட்டவிரோதமாக போதைப்பொருட்களை விற்றதாக நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி மற்றும் நடிகை ராகினி திவேதி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி போதைப்பொருள் பயன்படுத்தியது ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகைகள் இருவரின் தலைமுடி ஆய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ள நிலையில் விசாரணையில் இது ஒரு திருப்பு முனையாக இருக்கும் என கூறப்படுகிறது.