சனி, 28 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 23 மார்ச் 2022 (16:05 IST)

அமேசான் ப்ரைமில் சாணிக் காயிதம்…? ரிலீஸ் தேதி பற்றி வெளியான தகவல்!

இயக்குனர் செல்வராகவன் நடிகராக அறிமுகமாகும் சாணிக்காயிதம் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இயக்குனர் செல்வராகவனும் நடிகை கீர்த்தி சுரேஷும் நடிக்கும் சாணிக்காயிதம் படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே எதிர்பார்ப்புகளை உருவாக்கியது. படக்குழுவினர் படப்பிடிப்பை தொடங்கி நடத்திக் கொண்டு இருந்தபோது கொரோனா இரண்டாவது அலை வந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் படப்பிடிப்பு ரத்து பின்னர் மீண்டும் தொடங்கி முடிந்துள்ளது.

இப்போது படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்ட நிலையில் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்த படத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகமாக இருப்பதால் ஓடிடி வெளியீட்டுக்கு முயற்சி நடக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது படத்தின் பின்னணி இசையமைப்புப் பணிகள் நடந்து வரும் நிலையில் ஏப்ரல் 8 ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் நேரடியாக வெளியிட பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.