"கேள்வி கேட்க நான் ரெடி! மறுபடியும் வாக்களிக்க நீங்க ரெடியா" பிக்பாஸ் 3 அடுத்த ப்ரோமோ!

Last Updated: வெள்ளி, 21 ஜூன் 2019 (11:19 IST)
கடந்த 2017ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ்.  ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சி சீசன் 1 , சீசன் 2 , என்ற இரண்டு பாகமும் பட்டிதொட்டியெங்கும் பரவியது. இந்த நிலையில் சமீபத்தில் சீசனுக்கான பணிகள் துவங்கி கமல் பங்குபெறும் ப்ரோமோ ஷூட் படுமும்முரமாக நடைபெற்றது. 


 
ரசிகர்களின் ஏகோபித்த வரவவேற்பை பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3-வது  சீசனும் விஜய் டிவியில் தான் ஒளிபரப்பாக உள்ளது. இதனை தற்போது விஜய் தொலைக்காட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய  ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த ப்ரோமோ வீடியோவில் நடிகர் கமல்ஹாசன் " கேள்வி கேட்க நான் ரெடி! மறுபடியும் வாக்களிக்க நீங்க ரெடியா!" பிக்பாஸ் 2 டேஸ் டூ கோ என கமல் கெத்தாக பேசியுள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் ஜூன் 23 அன்று இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. மேலும் இனி திங்கள் முதல் ஞாயிறு வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. காணத்தவறாதீர்கள். 
 


இதில் மேலும் படிக்கவும் :