1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (18:46 IST)

“சித்தா படத்தைப் பார்த்து மணிரத்னம், கமல்ஹாசன் பாராட்டினர்…” சித்தார்த் மகிழ்ச்சி

பாய்ஸ் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் தமிழ் தெலுங்கு இந்தி உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் சித்தார்த். அடுத்து மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து படத்திலும் நடித்தார். ஆனால் அதன் பின்னர் சொல்லிக்கொள்ளும் படியான வெற்றிகள் அவருக்குக் கிடைக்கவில்லை. கடந்த சில வருடங்களாக சித்தார்த் நடித்த படங்கள் வெற்றி பெறாத நிலையில் இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் கதாநாயகனாக நடித்து தயாரித்து சில மாதங்களாக ரிலீஸ் ஆகாமல் காத்திருந்த சித்தா திரைப்படத்தின் செப்டம்பர் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் இப்போது சித்தார்த் கலந்துகொண்டு வருகிறார்.

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் “இந்த படத்தை எனது குரு மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் ஆகியோருக்கு திரையிட்டுக் காட்டினேன். இருவரும் பார்த்துவிட்டு பாசிட்டிவ்வாக பாராட்டியுள்ளார்கள். இதுவே விருது பெற்றதற்கு இணையான மகிழ்ச்சி. அடுத்து ஷங்கர் மற்றும் ஏ ஆர் ரஹ்மான் ஆகியோருக்கும் போட்டுக் காண்பிக்க உள்ளேன்” எனக் கூறியுள்ளார்.