1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 5 ஆகஸ்ட் 2020 (21:22 IST)

என்னம்மா சமந்தா புருஷன் புழிஞ்சி எடுக்குறாரு போல..? தீவிரமாக இறங்கி வெளியிட்ட வீடியோ!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.

கொரோனா ஊரடங்கு உத்தரவினால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது, யோகா , ஒர்க் அவுட் வீடியோ  என தங்களை பிஸியாக வைத்துள்ளனர். அந்தவகையில் சமந்தா வீட்டில் இருந்தபடியே, சிறிய அளவிலான முட்டைகோஸை வளர்த்து அறுவடை செய்தார்.


பின்னர் நாய்குட்டிகளுடன் விளையாடிய வீடியோ, யோகா புகைப்படங்கள் உள்ளிட்டவரை வெளியிட்டு தொடர்ந்து சமூகவலைத்தளத்தில் ரசிகர்களுடன் கனெக்டில் இருந்து வருகிறார். அந்தவகையில் தற்ப்போது வெறித்தமனாக ஒர்க் செய்த வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் ஸ்டோரி போட்டுள்ளார். இதனை கண்ட இணையவாசிகள் புருஷன் ரொம்ப டார்ச்சர் பண்றாரோ...? என கமெண்ட் அடித்து வருகின்றார். காரணம் இதற்கு முன்னர் சமந்தா கணவரின் அறிவுரைப்படி தான் யோகா , ஒர்க் அவுட் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துவதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.