சுயேட்சை எம் எல் ஏ-வின் பயோபிக்… தெலுங்கில் ஹீரோவாக களமிறங்குகிறாரா சமுத்திரக்கனி!
இயக்குனர் சமுத்திரக்கனி இப்போது தெலுங்கில் பிஸியான நடிகராகி விட்டார். அவர் இல்லாத பெரிய நடிகர்களின் படங்களே இல்லை எனும் அளவுக்கு எல்லா படங்களிலும் வில்லனாக நடித்து கலக்கி வருகிறார். அவர் 2021 ஆம் ஆண்டு ஜி 5 ஓடிடி தளத்துக்காக அவர் இயக்கிய படம்தான் விநோயத சித்தம். நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகி பாராட்டுகளைக் குவித்த இந்த திரைப்படம் சமீபத்தில் தெலுங்கில் ப்ரோ என்ற பெயரில் பவண் கல்யாண் நடிப்பில் ரீமேக் செய்தார்.
இந்த படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து சிரஞ்சீவி சமுத்திரக்கனியை அழைத்து பாராட்டியுள்ளார். இதனால் சமுத்திரக்கனி அடுத்து சிரஞ்சீவியை இயக்கப் போகிறார் என தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இப்போது சமுத்திரக்கனி ஆந்திராவைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம் எல் ஏ-வான கும்மாடி நர்சய்யா என்பவரின் பயோபிக் படத்தில் சமுத்திரக்கனி நடிக்க உள்ளார் என சொல்லப்படுகிறது. நர்சய்யா எல்லண்டு தொகுதியில் 5 முறை சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். எளிமையான வாழ்க்கையை வாழ்ந்த அவருக்கு சொந்த வீடு கூட இல்லை. மக்களின் மனிதன் என சிலாகிக்கப்படும் அவரின் பயோபிக் படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.