ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 29 மே 2018 (12:53 IST)

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியீடு!

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்து குறித்த அறிக்கையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். 
 
கடந்த 22 அம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மக்கள் மேற்கொண்ட பேரணியில் கலவரம் வெடித்து 13 பேர் சுட்டுக்கொள்ளப்பட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னர் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்கு தடை வித்தித்தது. 
 
இருப்பினும், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தது. கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர இணைய சேவை முடக்கப்பட்டது. மேலும், ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என தூத்துக்குடி கலெக்டர் உறுதியளித்தார்.
 
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என இன்று தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தூத்துக்குடி மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் மதிப்பளித்து ஆலையை மூட முடிவெடுக்கபப்ட்டுள்ளது. 
 
மாசுக் கட்டுப்பாட்டு வாரிய நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததால் கடந்த 24 ஆம் தேதி மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும், தண்ணீர் விநியோகமும் நிறுத்தப்பட்டது. பசுமைத்தீர்பாயம் மற்றும் மாசுக்கட்டுபாட்டு வாரியத்தின் நிபந்தனைகளை ஸ்டெர்லைட் நிறைவேற்றவில்லை எனவே ஸ்டெர்லைட் ஆலை நிரந்தமாக மூடப்படும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.