1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 11 ஜூன் 2024 (07:18 IST)

என்னை மார்பக அறுவை சிகிச்சை செய்ய வற்புறுத்தினர்… சமீரா ரெட்டி பகிர்ந்த தகவல்!

கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா, சமீரா ரெட்டி, திவ்யா ஸ்பந்தனா ஆகியோர் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் வாரணம் ஆயிரம். இந்த படம் வெளியான போது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒன்றாக உள்ளது.

இந்த படத்துக்கு முன்னர் சில படங்களில் நடித்திருந்தாலும், சமீரா ரெட்டியைப் பரவலாக அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் கொண்டு சென்றது இந்த படம்தான். ஆனால் அதன் பின்னர் அவர் நடித்த படங்கள் அவருக்கு பெரிய அளவுக்கு வெற்றியைப் பெற்று தரவில்லை. அதனால் அவர் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.

இந்நிலையில் இப்போது அவர் ஒரு அதிர்ச்சியான தகவலைப் பகிர்ந்துள்ளார். அவர் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போது அவரை மார்பக அறுவை சிகிச்சை செய்து கொள்ள அழுத்தம் கொடுக்கப்பட்டதாம். இதுகுறித்து பேசியுள்ள அவர் “மார்பகத்தைப் பெரிதாக எடுப்பாகக் காட்டும் அறுவை சிகிச்சை செய்துகொள்ள சொல்லி, என் கூட கூட இருந்தவர்களே வற்புறுத்தினார்கள். மேலும் அனைவரும் செய்து கொள்கிறார்கள். நீங்கள் ஏன் செய்துகொள்ள கூடாது எனக் கேட்டார்கள். ஆனால் நான் அந்த விஷயத்தில் உறுதியாக இருந்து அதை மறுத்து விட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.